உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் – ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.
மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.