இந்தோனேசியாவில் படகு ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
அந்த படகில் 139 பேர் இருந்ததாகவும், அத்துடன் பயணிகளைத் தவிர கார் , உந்துருளி போன்ற வாகனங்களும் இந்த படகில் ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்கடுகிறது.
விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகிலிருந்த 163 பேரின் நிலைமை இன்னமும் தெரியாத நிலையில் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த படகில் பயணித்த சிலரின் சடலங்கள் மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.