தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனின் யாழ்.மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றையநாள்குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் மணிவண்ணனின் முகவரியை தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக அறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் , தற்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.