பிக்கறிங் பகுதியில், நெடுஞ்சாலை 403இல் இன்று காலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் 38 வயது உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், Brock வீதிப் பகுதியில், இன்று முற்பகல் 7.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குப்பை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது குறித்த இந்த உந்துருளி மோதுண்டதில் விபத்து சம்பவித்ததாக கூறப்படுகிறது.
இதன்போது Whitby பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.