தாய்லந்தின் தாம் லுவாங் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும், அவர்களது பயிற்றுவிப்பாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் ஆகியேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மருத்துவமனையின் வெளியில் கூடியுள்ள பெருமளவான மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தாங் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த இந்த 12 சிறார்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் கண்டுபிடிக்க குகை ஆய்வில் சிறந்தவர்களான வோலாதன், ரிச்சர்ட் ஸ்டான்டன் மற்றும் ராபர்ட் ஹார்பர் ஆகிய 3 பிரித்தானிய நிபுணர்கள் உதவியது குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் தெரீசா மேதனது மரியாதையை தெரிவித்து்ளளார்.