பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்மேற்குப் பாகிஸ்தானில் மேற்கொள்ள்பபட்டுள்ள இந்த தாக்குதலில் உள்ளூர்த் தேர்தல் வேட்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
இன்றைய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானில் அதிபருக்கான தேர்தல் இந்த மாதம் 25ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தடுக்கும் முயற்சியாக பல்வேறு இடங்களில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ள்பபட்டு வருகின.