பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரித்தானிய அரசி எலிசபெத்துடன் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலின் ஒரு பகுதியை அந்த நாட்டு செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பொதுவாக பிரித்தானியா அரசி எலிசபெத்திடம் பேசும் விவரங்கள தலைவர்கள் வெளியிடுவது வழக்கமில்லை என்ற போதிலும், குறித்த ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது ஒரு சிக்கலான நடைமுறை என்று அரசி குறிப்பிட்டுதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்குமேல் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்காத அவர், அரசியுடன் நடந்த உரையாடல் குறித்த எந்த கேள்வியும் எழுப்பாதீர்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியின் தொடக்கத்தில் 2020ஆம் ஆண்டில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர் என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், சனநாயக கட்சியிலிருந்து தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.