இந்த மாத இறுதியில் இல்ங்கை சனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இத்தாலிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இல்ஙகை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பது, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் பேசப்படும் என்றும், இது தொடர்பில் தொடர்ச்சியாக தாங்கள் சனாதிபதியை சந்தித்து வருவதாகவும் இரா சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.