ஹெயிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களை அடுத்து, அந்த நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார்.
அங்கு எரிபொருள் விலை அதிகரிப்பு அறிவிப்பினைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் இந்த போராட்டங்களை அடுத்து எதிர்கட்சியினரும் ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையிலேயே தமது பதவி விலகல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளள பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட், தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து்ளளார்.
ஹைதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களை அடுத்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் உரையாற்றிபோது இந்த விபரத்தை பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் தெரிவித்துள்ளார்.