சாலை விபத்தொன்றில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் இன்று இடம்பெற்றுள்ளது.
சாலை ஒன்றில் பயணித்த பேருந்து ஒன்று, இன்று அதிகாலை வீதி ஓரத்தில் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்க்பபட்டிருந்த போது, அதன் வழியே பயணித்த பாரவூர்தி ஒன்று அதனை மோதியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்த 50 பேர் குறித்த பேருந்தில் இருந்ததாகவும், அவர்களில் 18 பேரே உயிரிழந்த நிலையில், ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்க்பபட்டுள்ளதாகவும் தெரிவிகக்பபடுகிறது.