நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவுப் பணியகத்திலும் பணியாற்றும் இவர், இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயவே இலங்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக அவர், இலங்கை அரசாங்க மற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடாத்தியுள்ளார்.
நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற மாரி யமாஷிடா, சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளதுடன், இதன்போது இராணுவத்தினரான முன்னெடுக்கப்படும் சமூகப் பணிகள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் பணியாற்றுவது தொடர்பாக இருக்கும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளதாகவும், இந்தச் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேராவும் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.