மாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நுளைந்த பயங்கரவாதிகள், அங்கு எதிர்ப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் உள்ளதுடன், அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் அங்கு அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் படைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.