துருக்கியில் நடப்பில் இருந்த அவசர நிலை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
2016ல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன், அவசர நிலையின் கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டதுடன், பலர் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.
இந்த அவசர நிலை ஒவ்வொரு தடவையும் 3 மாதங்கள் என்ற கால அளவில் ஏழு முறை நீடிப்புச் செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு அது நடப்பில் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இம்முறை நடாத்தப்பட்ட அதிபர் தேர்தலிலும் ரிசெப் தாயிப் எர்துவான் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்ட சில வாரங்கள் கழிந்துள்ள நிலையில், மீண்டும் அவசர நிலைக் காலத்தை நீட்டிக்கவேண்டியதில்லை என்ற முடிவை அந்த அரசு எடுத்துள்ளது.