நெடுஞ்சாலை 401இல் இன்று காலையில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய அதி விரைவுத் தடங்களில், Allen வீதிப் பகுதியில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இணைப்ப கொள்கலனுடனான கனரக வாகனங்கள் இரண்டும், SUV ரக வாகனம் ஒன்றும் இதன்போது மோதுண்டதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு வாகனமும் சேதமடைந்திருக்கக்கூடும்என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது கனரக வாகனங்களில் ஒன்று கவிழந்து வீழ்ந்துவி்டட நிலையில், அதற்குள் சிக்குண்டிருந்த ஆண் ஒருவரை மீண்டு வெளியே கொண்டுவருவதற்கு ஏறக்குறைய 25 நிமிடங்கள் ஆனதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த 40 வயது நபர், ஆபத்தான காயங்களுடன் ரொரன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இநத் விபத்தில் படுகாயமுற்ற மேலம் ஒரு நபரும் பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டதையும், மேலும் ஒருவர் ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படடதையும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தினை அடுத்து அந்த வீதிப் பகுதி ஊடான போக்குவரத்துக்ள தடை செய்யப்பட்டிருந்த போதிலும், சற்று முன்னர், ஆறு மணியளவில் அவை திறந்து விடப்பட்டுள்ளன.