ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள சர்தாரா எனும் இடத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையின் போது நடாத்தப்பட்ட வான்வழி தாக்குதலிலேயே இந்த உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளன.
ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்க படையினரா அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக காபூலில் இருந்து விசாரணை குழு அந்த பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து்ளளார்.