தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை சிறப்புகூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மருதானை, சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான அமைப்பின் உறுப்பினர்கள், அமைச்சரின் ஆலோசகரான சட்டத்தரணி சிறீநாத் பெரேரா, சமூக ஆர்வலர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே தவணையில் விடுதலை செய்யவேண்டும், இவர்களின் விடுதலையானது குறுகிய காலத்திற்குள் அமைதல் வேண்டும் உள்ளிட்ட மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து குறித்த இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் மனுவொன்றைக்கையளித்திருந்தது.
இந்த நிலையிலேயே நாளை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.