தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹைக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் செய்த குற்றத்துக்காக அவருக்கு இந்த 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றத்துக்காக அவருக்கு ஏற்கெனவே 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவின் அதிபராக அவர் பதவி வகித்த போது அவர் தமது தோழி சோய் சூன் சூலுடன் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவருக்கு அந்த 24ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.