அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சரல் நகரத்தில் மூன்று மணி நேரம் பிணையாளிகளைக் கடையில் பிடித்து வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று லொஸ் ஏஞ்சல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் துரத்திச் சென்ற நிலையில், கடை ஒன்றினுள் நுளைந்த அந்த நபர் அங்கிருந்த கிட்டத்தட்ட 40 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததால் பதற்றம் நிலவியது.
அத்துடன் அந்த சந்தேக நபர் அந்த கடையில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை சரணடையச் செய்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்ட நிலையில் அவர் சரணடைந்துள்ளதாகவும், அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.