வியட்நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதுடன், 13 பேரைக் காணவில்லை என்றும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சென்ற புதன்கிழமை அங்கு வீசிய சூறாவளியை தொடர்ந்து அங்கு வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்க்பபட்ட பகுதிகளிலும் உள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.
கிட்டத்தட்ட 15,000-க்கு மேற்பட்ட வீடுகளும் 110,000 ஹெக்டர் விவசாய நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
வியட்நாமில் ஒவ்வோர் ஆண்டும் பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு வெள்ளத்திற்கு 389 பேர் பலியானதாகவும் 6.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகவும் வியட்நாம் அரசாங்கம் தெரிவித்தது.