ஈரான் நாட்டில் இன்றும் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய நாள் நாட்டின் தென்பகுதி மற்றும், மேற்குப் பகுதி என மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்து தெற்கே கிட்டத்தட்ட 1100 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தில் நூறுபேர் வரையில் காயமடைந்ததாகவும், நேற்றில் இருந்து ஏற்பட்ட நிலநடுகங்களால் மொதம் 400இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு கிட்டத்தட்ட 620 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.