கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில் திடீரெனக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதுடன், அது ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட இந்த காட்டுத் தீயில் அந்த வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கிக் கொண்டனர் என்றும், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 56-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும் கிரேக்க நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு ஏதென்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீயை அனைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளின் உதவியை கிரீஸ் அரசு நாடியுள்ளது.