போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்தவண்ணம் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆராய சிறப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இலங்கை சனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ள அமைச்சரவை சந்திப்பில் இந்த குழு நியமிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்ற துறைகளின் பிரதிநிதிகளின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளது எனவும், இந்த குழு இன்றைய அமைச்சரவை சந்திப்பின் போது நியமிக்கப்படும் என்றும் இலங்கை சனாதிபதி அண்மையில் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பிலும் அரசாங்கத்தின் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான கட்டளைச்சட்டம் உருவாக்கும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.