தமிழ் மக்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ள அவர், தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், சுயநிர்ணய உரிமைகளை வழங்கும் வகையிலுமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்பதையும் சுட்டிக்ககாட்டியு்ளார்.
இதற்கு ஆர்வமுடையத் தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அதேநேரம் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பு ஒன்றை முன்வைக்காமல் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏலவே தென்னிலங்கை அரசாங்கமானது வடக்கு கிழக்கில் தமிழர்களது இருப்பை விழுங்க ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.