ரொரன்ரோ Danforth பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான 10 வயது சிறுமியின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இதனைத் தெரிவித்துளள காவல்துறையினர். உயிரிழந்த சிறுமி மார்க்கம் பகுதியைச் சேர்ந்த பத்து வயதான யூலியானா கோசிஸ்(Julianna Kozis) என்று அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், குறித்த இந்தச் சிறுமி படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அந்த சிறுமியின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனடியாக அவரது பெயர் விபரங்களை வெளியிடவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற வேளையில குறித்த அந்தச் சிறுமி தனது குடும்பத்தாருடன் அந்த உணவகத்தில் குளிர் கழி அருந்தியவாறு இருந்ததாக, அந்த உணவகத்தின் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.