ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படை வாகனம் மீது தலிபான்கள் இன்று தற்கொலைப்படை தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
காபூல் நகரில் இன்று அதிகாலை வாகனம் ஒன்றில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பயணித்துக்கொண்டிருந்த போது அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறைத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
தாங்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ள தலீபான் அமைப்பினர், இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.