டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிவு செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் இந்த மனு பரிசீலிக்கப்பட்டபோது, அதனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெனிஸ்வரனின் அமைச்சு பதவியை பறிக்கும் முதலமைச்சரின் கட்டளையை நீக்கம் செய்து, அவருக்கு மீண்டும் அந்த பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
எனினும் இந்த உத்தரவுக்கு அமைய தற்போது வடமாகாண அமைச்சர்கள் சபையில் உள்ள எவரையும் பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அதற்கு எதிராக உயர் நீதிமன்றில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.