மியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 16,000இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் தாய்லாந்து எல்லையுடன் உள்ள மாநிலமே இந்த மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பெருமளவான நிலப்பரப்புகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு மேடான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாதிக்க்பபட்ட பகுதிகளில் சிக்கிக்கொண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.