வடக்கு,கிழக்கு உள்ளிட்ட 7 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் சனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாண சபைகளுக்கான தேர்தல் சனவரி 5 ஆம் நாள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறத.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோதே, மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்த இந்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.