குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் சென்ற நிலையில் மெக்சிகோ எல்லையில் வைத்துப் பிரிக்கப்பட்ட குழந்தைகளில் 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மத்திய நீதிபதி ஒருவர், தகுதியுள்ள குடியேறி குடும்பங்கள் ஒன்று சேர்த்து வைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டதன் பின்னர் அவர்களை ஒன்று சேர்ப்பதற்கான இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் நீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த பின்னரும் கூட, பெற்றோரைப் பிரிந்திருக்கும் 700 பிள்ளைகள் இன்னமும் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குடும்ப உறவு உறுதிப்படுத்தப்படாமல் இருத்தல், பெற்றோருக்குத் தொற்றுநோய் பரவியிருத்தல், பெற்றோருக்குக் குற்றப் பின்னணி இருத்தல், பெற்றோரை அடையாளம் காண முடியாததுள்ளமை ஆகிய காரணங்களால் இந்த பிள்ளைகளை ஒன்றுசேர்க்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.