அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்த்ளளார்.
அத்துடன் அமெரிக்காவுக்குச் செல்லவும் தாம் தயார் என்றும் அவர் இன்று கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மாநாடு ஒன்றை அமெரிக்கா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து புட்டினின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
ஆர்ஜண்டீனாவில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு இடையே இருவரும் பேசத் திட்டங்கள் இருப்பதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஈரான், சிரியா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதுமானது அல்ல என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோ நகருக்கு வருமாறும் அவர் அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரஸில், ரஷ்யா, இந்தியா,சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே தென்னாபிரிக்கத் தலைநகர் ஜொஹான்ஸ்பர்க்கில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர் ஊடகவியலாளரிடம் பேசிய போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.