உடல் நிலை மோசமடைந்தமையால் வீட்டிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகைத்தின் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மேலதிக சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு திடீரென கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் நிலை சீரடைந்துள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊடகவியலாளரிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் இவ்வாறு கூறியுள்ளதுடன்,மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையும் அவ்வாறே தகவல் வெளியிட்டுள்ளது.
பருணாநிதியின் இரத்த அழுத்தம் திடீரென குறைந்ததை அடுத்து காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகாலை 1.30க்கு அவர் சேர்க்கப்பட்டார் என்றும், மருத்துவ மேலாண்மை மூலமாக அவரது இரத்த அழுத்தம் சீர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
மருத்துவ வல்லுநர் குழுவினால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.