திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று சனிக்கிழமை மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே காவேரி மருத்துவமனைக்கு வெளியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய திராவிட முன்னேற்றக் கழத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கருணாநிதியின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருக்கும் கருணாநிதிக்கு, அவரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் மருத்துவ உதவிகள் வழங்க தமது அரசு தயாராக உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நிலை மோசமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த கருணாநிதி, வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் சென்றும் தொலைபேசி ஊடாகவும் விசாரித்து வருகின்கறனர்.