நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள மின் மாற்றி ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தை அடுத்து, ஆயிரக்கணக்கானோருக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், இன்னமும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் தடைப்பட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Finch Avenue மற்றும் Signet Drive பகுதியில் அமைந்து்ள்ள ரொரன்ரொ ஹைட்ரோ வளாகம் ஒன்றில், நேற்று நள்ளிரவு வேளையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதுடன், தீ வேகமாக பரவிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மூன்று மணி நேரங்கள் ஆணதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த தீப்பரவல் ஏற்பட்டதனை அடுத்து ஏறக்குறைய 35,000 வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட போதிலும், விரைந்து செயற்பட்ட பணியாளர்கள் மின் வினியோகத்தினைச் சீர் செய்த நிலையில், இன்று காலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி ஏழாயிரம் வாடிக்கயாளர்கள் மின் வினியோகம் அற்ற நிலையில் காணப்பட்டதாக ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்திருந்து.
எனினும் இன்று மாலை ஆறு மணி அளவிலான நிலரப்படி இன்னமும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் சீர் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அனைவருக்குமான மின் வினியோகம் எப்போது வழமைக்குத் திரும்பும் என்ற தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.