ஒன்ராறியோவில் இருந்து பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் நோக்கி புறப்பட்டுச் சென்ற சிறிய ரக வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்ராறியோவில் புறப்பட்டு சென்று செல்ல வேண்டிய இடம்வரையில எந்தவித கோளாறுகளும் இன்றிப் பயணித்த இந்த வானூர்தி, தரையிறங்கும் முயற்சியின் போது ஓடுபாதைக்கு அருகே வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரண்டு இயந்திரங்களை கொண்ட அந்த வானூர்தி வீழந்த உடனேயே அங்கு மீட்பு படையினர் விரைந்த போதிலும், அந்த வானூர்தியில் இருந்த மூன்று பேரும் சம்பவத்தின் போதே உயிரிழந்துவிட்டமை உறுதிப்படு்தப்பட்டுள்ளது.
கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து தொடர்பில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.