சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை ட்ரம்ப் அரசு அமல்படுத்தினால் அதற்கு தக்க பதிலடிகொடுக்கப்படும் என்று சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் சட்ட அடிப்படையிலான உரிமைகள் மற்றும் பலன்களை காத்துக் கொள்வதற்காக நிச்சயம் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறியுள்ளார்.
எனினும், பதிலடி என்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
அமெரிக்க அரசு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான சுமார் 800 பொருட்களுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையிலேயே அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு தக்க பதிலடி கொடுக்க்பபடும் என்று சீனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.