கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்த்தரப்பு தொடர்பான ஒரு தகவலை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த அந்த சந்திப்பு சட்டபூர்வமானது என்றும் அவர் தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான “ட்ரம்ப் டவரில்” ரஷ்யாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன் சந்தித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்பினால் நேரடியாக சொல்லப்பட்ட ஒரு கூற்றாக இது பார்க்கப்படுகிறது.
அத்துடன் அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையில் அதிபர் டிரம்ப்பின் இந்த கருத்து இயல்பாக முக்கியத்துவம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.