தனது நாட்டுக்கான கனேடிய தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு சவூதி அரேபிய அரசாஙகம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இந்த வெளியேற்ற உத்தரவினைப் பிறப்பித்து்ள்ள சவூதி அரேபிய அரசாங்கம், கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகங்கள் மற்றும் முதலீட்டு பரிமாற்றங்களையும் முடக்கி வைத்துள்ளது.
தமது நாட்டுக்கான கனேடிய தூதுவர் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதகவர் எனவும், எனவே அவரை 24 மணி நேரத்திற்குள் சவூதியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் வெளியுறத்துறை அமைச்ச தெரிவித்துள்ளது.
அத்துடன் கனடாவுக்கான தமது நாட்டுத் தூதுவரையும் உடனடியாக நாடு திரும்பும்படி அழைத்துள்ளதாகவும் அது தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சவூதி அரேபியா மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சுகளுக்கு இடையே, மனித உரிமைகள் விடையத்தில், கீச்சகப் பதிவு வாயிலாக ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த அரசதந்திர முரண்பாட்டுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
சமார் படாவி(Samar Badawi) உட்பட பெண்கள் உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து தாங்கள் கரிசனை கொள்வதாகவும், அவர்களையும் அனைத்து அமைதி வழியிலான மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு ச்வூதி அரேபிய அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் கனடாவின் அந்த கீச்சகப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பதிவில் “உடனடியாக விடுவிக்கவும்” என்று கனடாவால் கூறப்படடது ஒரு பொறுப்பற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத, துர்ரதிஸ்டவசமான ஒரு சொல்லாடல் எனவும், இது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவை பாதிப்பதாகவும் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு தனது கீச்சகப் பதிவில் பதிலிட்டிருந்தது.
இதனையும் தாண்டி கனடா தமது உள்ளக விவகாரங்களில் தலையிடுமாக இருந்தால், தாமும் கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அது எச்சரிக்கை விடுத்திருந்தது.
சவூதி அரேபியாவின் இந்த பதிவுகளுக்கு காடடமான பதிலையும் விளக்கத்தையும் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட்டும் முன்வைத்துள்ள நிலையிலேயே, தற்போது சவூதி அரேபியா, தனது நாட்டுக்கான கனேடி தூதுவரை வெளியேறுமாறான உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.