5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நாட்டில் உள்ள பிரதான நதிகளை இணைக்கும் இந்த திட்டம் தொடபில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த போதே இந்த 5 திட்டங்களும் நடப்பு நிதியாண்டிலேயே அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குளேயே தொடங்குவதற்கு தாங்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
2 இலட்சம் கோடி இந்திய ரூபா மதிப்பிலான இந்த திட்டத்துக்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதியுதவி பெறப்படும் என்றும் அவர் விபரம் கூறியுள்ளார்.