ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெளதிப் போராளிகள் வசமுள்ள அந்த பகுதியில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்ளிட்டவர்களே உயிரிழந்ததாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
ஏமன் அரசாங்க ஆதரவுடன், அந்த நாட்டிலுள்ள ஹெளதிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சௌதி தலைமையிலான கூட்டணி இந்த தாக்குதல் சட்டப்படியானதுதான் என்று தெரிவித்துள்ளது.