அமெரிக்க இறக்குமதிகளான பயணிகள் வாகனம், மதுபானம், புகையிலை உள்ளிட்ட பல பொருட்கள் மீது மிக அதிகமான வரிவிதிப்பை துருக்கி நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
பயணிகள் காருக்கு 120 சதவீத வரியையும், மதுபான வகைகளுக்கு 140சதவீத வரியையும், புகையிலைக்கு 60 சதவீத வரியையும் விதித்து துருக்கிய அதிபர் றீசெப் தயீப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க பாதிரியார் ஒருவரை விடுதலை செய்வதற்கு துருக்கிய மறுத்ததை அடுத்து, துருக்கியின் இறக்குமதிகள் மீது இரண்டு மடங்கு வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்து்ளளார்.
அமெரிக்காவின் தடையினால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு டொலருக்கு நிகரான துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த வரி விதிப்பை துருக்கி மேற்கொண்டுள்ளதுடன், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக தாங்களும் இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக கூறியுள்ளது.
அத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணுப் பொருட்களை புறக்கணிப்பதற்கும் துருக்கி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.