ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒன்ராறியோ மாநில அரசின் சர்ச்சைக்குரிய சட்டமூலம் நேற்று ஒன்ராறியே சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், கடந்த யூலை மாதத்தில் குறித்த இந்த சட்டம் தொடர்பில் திடீரென்று அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாதகால விவாதங்களின் பின்னர் நேற்று அநத சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.
ரொரன்ரோ நகரசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ மாநில அரசின் இந்த திட்டம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்ததுட்ன, ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் இது குறித்து தனது அதிருப்தியினை நேரடியாகவே வெளியிட்டிருந்தார்.
எனினும் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒன்ராறியோவின் அண்மைய தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற பழமைவாதக் கட்சி அரசு குறித்த இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.