இந்தோனேசியா நாட்டில் உள்ள லொம்போக் (Lombok) தீவை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று மீண்டும் தாக்கியுள்ளது.
476இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலநடுக்கம் பூமிக்குக் கீழே 7.9 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டங்களை விட்டு வெளியேறி வெளியான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் இன்று காலை 8.2 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.