ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோவின் வாவா(Wawa) பகுதியில் இருந்து தெற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், நெடுஞ்சாலை 17இல், நேற்று இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு நோக்கி சென்ற வாகனமும், தெற்கு நோக்கி பயணித்த வாகனமும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாகவும், இரண்டு வாகனங்களில் ஒன்பது பேர் பயணித்துக் கெர்ணடிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.
வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தில் சென்ற ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்தோரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மேலும் இருவர் பாடுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடானா போக்குவரத்துக்ள தடை செய்யப்பட்டு, மீண்டும் திறந்து விடப்பட்டுள்ள போதிலும், விசாரணைகள் இன்னமும் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.