இந்தியாவுடன் அமைதிப் பேச்சுக்களை நடாத்துவதற்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு தமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இதுவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சி என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலை மாறி, தற்போது இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கு ஆட்சியில் இருந்த முந்தைய நவாஸ் ஷெரீப் அரசு எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவிப்பதாக குறை கூறப்பட்டதுடன், இதன் காரணமாக அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது.