இந்தியாவின் கேரள மாநிலத்திற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், இந்தியாவில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பில் தங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேவையான மனிதாபிமான உதவிகள் எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு எமிரேட் அளிக்க முன்வந்த 700 கோடி ரூபாவை ஏற்பதற்கு முடியாது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.