எத்தியோப்பியா நாட்டில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேருடன் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி பறந்து சென்று கொண்டிருந்த நிலையில் அந்த வானூர்தி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அந்த வானூர்தியில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், இது தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டு இராணுவம் முன்னெடுத்து வருகிறது.