வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் கோபாலகிருஸ்னன் ராஜ்குமாருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் நாள் இவரை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் உள்ள காவல் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.





