ரொறொன்ரோ வர்த்தக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை 20 வயதுடைய சியோன் சன்கர் பெஹாரி (Zion Sankar-Beharry) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
யோர்க் டேல் வர்த்தக வளாகப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் தொடர்ச்சியாக இந்தத் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மீது 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.