பனி போருக்குப் பின்னர் ரஷ்யா மிகப்பெரிய ராணுவ அணிவகுப்புக்கு தயாராகி வருகின்றது.
கிழக்கு சைப்பீரியாவில் இடம்பெறவுள்ள இந்த அணிவகுப்பில் சுமார் 300,000 படையினர் பங்கேற்கவுள்ளனர்.
இதன்பொருட்டு சீனா 3200 படையினரை அனுப்பவுள்ளதுடன், மங்கோலியாவும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள படைகளை அனுப்புகிறது.
கடந்த 1981 ஆம் ஆண்டு பனிப்போர் காலத்தில், இதே போன்று ரஷ்யா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது என்ற போதிலும், நடைபெறவுள்ள இந்த வொஸ்டாக்-2018 பயிற்சி நடவடிக்கை அதனைவிட மேலதிக படைகளை உள்ளடக்கியுள்ளது.
நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் வலுப்பெற்று வரும் நிலையில் இவ்வாறான ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.