சட்பெரி பகுதியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு வெடி பொருட்களை இவ்வாரத்தில் பத்திரமாக கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெட்மேன் ஏரி பகுதியில், வெடி பொருட்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், குறித்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேடுதலுக்கான அனுமதியுடன் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர், ஒரு கொட்டகையில் இருந்து குறித்த வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
வெடிபொருள் தொடர்பான வல்லுனர்கள், வெடி பொருட்களை கண்டறிவதற்கும், குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், இயந்திர மனிதப் பொறிமுறையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச்சம்பவம் தொடர்பில் யாரேனும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடாத காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.